Sunday, January 1, 2012

விஜய் க்கும் - சூர்யா க்கும் இதை சொல்லியே ஆகவேண்டும்

விஜய் க்கும் - சூர்யா க்கும் இதை சொல்லியே ஆகவேண்டும் 

இதற்காக நான் விஜய் சார் க்கும் - சூர்யா சார் க்கும் வில்லன் அல்ல.
(எழுத எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு இவங்கள பத்தி எழுதி எதுக்குடா டைம் வேஸ்ட் பண்றேன்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது.)

# முதலில் விஜய் அண்ணன்!

சமீபத்தில் "நண்பன்" பட இசை வெளியீட்டு விழா கோவை மண்ணில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.அதுல உனக்கு என்னனு கேக்கறீங்களா!?

சொல்றேன் கேளுங்க. நான் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நொடிக்கு ஒருமுறை விளம்பரபடுதப்பட்டு, சகோதரனின் கட்டாயத்தால் பார்த்து தொலைத்தேன் (நேரத்தை). எல்லோரும் ஷங்கரை புகழ்வதும், ஷங்கர் எல்லோரையும் புகழ்வது என்று ஒரே அலப்பறை. முடியல:'(

இதோ...
விஜய் இப்படி சொன்னார் - " டைரக்டர் ஷங்கர் சார் இந்தியாவின் Spielberg !!!"

@@ இதை சொல்வதற்கு விஜய் க்கும் தகுதி கிடையாது. 
இந்தியாவின் ஸ்பீல்பெர்க் ஆக சொல்லப்பட்டவருக்கும்[ஷங்கர்] தகுதி கிடையாது.@@

##முதலில் விஜய்க்கு என் கேள்விகள் :
1)  அண்ணே உங்களுக்கு வெக்கமாவே இல்லையா?
2) Steven Spielberg வரலாறு தெரியுமா உங்களுக்கு?
3) Steven Spielberg எப்போ ரீமேக் படம் எடுத்தார் ? 
4) ஒரு மேடை, மைக் குடுத்தால் என்னவேனா பேசறதா? 
**கேக்கறவன் என்ன கேணப்### ஆ? 
( அதற்கும் வெட்கம் கெட்ட என் நண்பர்கள் கைகள் தட்டினார்கள் என்பதும், அதையும் ஒரு வெட்கம் கெட்ட தனியார் தொலைகாட்சி விளம்பரம் செய்தது என்பதும் வேறு கதை )
5 ) பிரமாண்டமா செலவு செஞ்சு படம் எடுக்கரவன்லாம் Steven Spielberg ஆகமுடியுமா?
6)  ஷங்கரோட அடுத்த படத்துல நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வேணுமா?

## விஜய்க்கு,
 அண்ணே!! உங்களுக்கு ஷங்கர் பத்தி இவ்ளோ தான் தெரியுமா? நான் சொல்றதையும் கேளுங்க.ஏதோ இவ்ளோ நாளா சுஜாதா என்ற அறிவியல் ஊற்று இருந்ததால டைரக்டர் ஷங்கரும் பொழப்ப ஓட்டிட்டு இருந்தார்.
சுஜாதாவின் மறைவு யாருக்கு இழப்போ இல்லையோ, ஷங்கருக்கு நிச்சயமாக மாபெரும் இழப்பு.
அதன் பாதிப்பையும் "எந்திரன்" படத்தில் அதிகமாகவே காணலாம்.
இங்க நோட் பண்ணவேண்டிய விஷயம் என்னனா, சுஜாதாவின் மறைவுக்கு அடுத்த படமே ரீமேக் இல் இறங்கியிருக்கிறார் என்பதே.
Blah... Blah....

# அடுத்ததாக சூர்யா அண்ணன்!!

உங்களை dash dash என்று திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அது எனக்கு கேவலம் கூட.
அப்பாவி தமிழனை "போதிதர்மர்" என்று ஏமாற்றியது போதாதென்று "ஒரு கோடி" கிடைக்கும் என்று தெருக்கோடி அனுப்ப தயாராயிடீங்க. 

-- நண்பர்களே கடைசியில் கோடீஸ்வரன் ஆகபோவது சூர்யா மட்டுமே. நான் அல்ல.

விடுங்கள் உங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு Green Words [வெண்டை, சுண்டை] தான் தோன்றுகிறது.
நீங்களும் தமிழன் தான் என்பது எனக்கு கேவலமாக இருக்கிறது.

Conclusion:   
Share பண்ணுங்கப்பா. 

Free Projects Download :

Free Projects Download :
Free students projects download for all.

Popular Posts( Last 7 Days )