
விஜய் க்கும் - சூர்யா க்கும் இதை சொல்லியே ஆகவேண்டும்
இதற்காக நான் விஜய் சார் க்கும் - சூர்யா சார் க்கும் வில்லன் அல்ல.
(எழுத எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு இவங்கள பத்தி எழுதி எதுக்குடா டைம் வேஸ்ட் பண்றேன்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது.)
# முதலில் விஜய் அண்ணன்!
சமீபத்தில் "நண்பன்" பட இசை வெளியீட்டு விழா கோவை மண்ணில் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.அதுல உனக்கு என்னனு கேக்கறீங்களா!?
சொல்றேன் கேளுங்க. நான் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நொடிக்கு ஒருமுறை விளம்பரபடுதப்பட்டு, சகோதரனின் கட்டாயத்தால் பார்த்து தொலைத்தேன் (நேரத்தை). எல்லோரும் ஷங்கரை புகழ்வதும், ஷங்கர் எல்லோரையும் புகழ்வது என்று...