
எனது முந்தைய பதிவில் குறிப்பட்டது போலவெ அசல் பர்ஸ்ட் டேய் பர்ஸ்ட் ஷொ பார்தாச்சு.எதிர்பார்த்ததை போலவெ பழி வாங்கும் கதைதான், ஆனால் கொடுத்த விதம் இன்ட்ரஸ்டிங்.பிரான்சில ஜீவ நாதன் ஒரு பெரிய ஆயுத டீலர், கவர்ன்மென்ட்க்கு மட்டுமே ஆயுதம் சப்ளை செய்யும் அப்பா அஜித், அவரோட மூனு பசங்க சம்பத், பிராசத் அப்புறம் ஸ்டெப் சன் அஜித்.ஆரம்பதிதிலிருன்ந்து அஜித்தை ஒதுக்கியெ வைக்கிறாங்க சம்பத்தும் பிரசாத்தும், அப்பா அஜித்துக்கு மகன் அஜித் மேலாதான் பாசம் அதிகம்.தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் கும்பலுடன் டீல் செய்ய ஆசைப்படுகிறார்கள் சம்பத்தும் பிரசாத்தும், அதற்க்கு அப்பா அஜித் தடை சொல்ல மாமா மிலிந்த் துனையுடன் டீலா முடிக்க ஏற்கனவே டீல் செய்த மும்பையின் ஷெட்டி...